ரித்விக்கால் 'கைதி' தில்லியாக மாறிய கார்த்தி! லீக்கான வீடியோ பதிவு..
சர்தார் படப்பிடிப்பின் போது யூடியூப் பிரபலம் ரித்விக்குடன் நடிகர் கார்த்தி உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்தார்
கார்த்தியின் “சர்தார்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
இதில் கார்த்தியுடன் ஜோடியாக ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் முன்னிலையில் ரித்விக் கைதி இசையை முனுமுனுத்த படி லொறி ஒட்டுவது போல ஸ்டியரிங்கை அசைத்து விளையாடுகிறார். அப்போது கார்த்தி சத்தம் பத்தாது என அவர் கைதி பின்னணி இசையைக் கார்த்தி இன்னும் அதிக சத்தமாக முனுமுனுக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
#SARDAR Shooting Spot BTS?#Kaithi Theme & Lorry A Love Story♥️#Karthi | #RithuRockspic.twitter.com/aFYGNmK2v4
— Saloon Kada Shanmugam (@saloon_kada) October 19, 2022