ஒன்றாக பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள்- ஆனால் உண்மை என்ன தெரியுமா? வைரல் காட்சிகள்
இரண்டு பாம்புகள் ஒன்றாக பின்னிப்பிணைந்து நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஐபிஎஸ் அதிகாரியான ரூபின் சர்மா, இந்த வீடியோவை வெளியிட நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.
அந்த வீடியோவில், வீட்டின் மேற்கூரையில் இரண்டு பாம்புகள் ஒன்றாக இணைந்து ஆடுகின்றன.
மேற்கூரையிலிருந்து கீழே விழுந்த பின்னரும், ஆடுவதை தொடரும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
பலரும் இரண்டு பாம்புகள் உறவு கொள்கிறதா? நடனமாடுகிறதா? அல்லது சண்டையிடுகிறதா? என அடுத்தடுத்த கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் உண்மையிலேயே ஒரே வகையை சேர்ந்த இரண்டு ஆண் பாம்புகள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியே இதுவாகும்.
#Naag_Naagin ??☺️☺️☺️
— Rupin Sharma IPS (@rupin1992) August 14, 2021
Courtship in Snakes...
नाग और नागिन का Prem@ParveenKaswan @SudhaRamenIFS @susantananda3 @Snakes_CS @REPTILESMag @wti_org_india pic.twitter.com/57AfUd7mFl