அட இவ்வளவு அழகா? பார்ப்பவர்களின் உள்ளத்தை உருக்கிய குழந்தையின் சிரிப்பு- வைரல் காணொளி
இணையவாசிகளை அசர வைக்கும் அளவிற்கு குழந்தையொன்று சிரித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மழலையின் சிரிப்பு
பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து ஆளாகும் வரை அவர்களை எதைச் செய்தாலும் அழகு தான்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. அவர்களின் கள்ளம், கபடம் இல்லாத குணம் ஒரு நிமிடம் எம்மை மெய் மறக்க செய்யும்.
குழந்தைகளின் உலகில் போட்டி, பொறாமை, ஈகோ, கோபம், அழுகை இப்படி மனிதர்களை அழிக்கும் எந்தவிதமான தீங்கான விடயங்களும் இருக்காது.
அவர்களின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.
அந்த வகையில் வீட்டிலுள்ளவர் ஒருவர் குழந்தையை பார்த்து சிரிக்குமாறு கூறுகிறார்.சுமாராக 2 மாதங்கள் இருக்கும் அக்குழந்தை அவ்வளவு அழகாக சிரிக்கிறது.
அந்த குழந்தையின் சிரிப்பை பார்க்கும் போது இணையவாசிகள் ஒரு நிமிடம் அசந்து விட்டார்கள்.
இந்த காட்சி பல்லாயிரக்கணக்கான இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் “ எவ்வளவு அழகாக சிரிக்கிறாங்க..” என நெட்டிசன்கள் கருத்துக்களையும் பதிவுச் செய்து வருகின்றார்கள்.
அந்த சிரிப்பு ???? pic.twitter.com/5uQtAO4Guw
— ?எனக்கொரு டவுட்டு!? (@Thaadikkaran) July 26, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |