அந்த 3 பேருக்கு தகுதியே இல்லையா? பிக்பாஸ் டாப் போட்டியாளர்களை அறிவித்த விசித்ரா
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடைசியாக வரும் 5 போட்டியாளர்கள் பற்றி நடிகை விசித்திரா பேசியுள்ளார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்சியில் யாரும் எதிர்பாராத போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் நடிகை விசித்ரா.
இவர், பைனலிஸ்ட்டில் ஒருவராக இருப்பார் என ரசிகர்கள் நினைத்த வேளையில், 98-ஆவது நாட்களின் பின்னர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் விசித்திரா தன்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவரை பார்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரபல நடிகர் ஒருவரை பற்றி விசித்திரா பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
டாப் 5 போட்டியாளர்கள்
இந்த நிலையில் விசித்ரா தற்போது, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் பிரபலங்களில் டாப் போட்டியாளர்கள் யார் யார் என்பதனை ஓபனாக பேசியுள்ளார்.
அந்த வகையில், “நான்காவது இடத்தை டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக முதல் பைனல் லிஸ்ட்டாக இருக்கும் ரயானுக்கு கொடுத்துள்ளார். ரயான் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டை விளையாடி வருவதாகவும், அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர். மூன்றாவது இடத்தை ஜாக்குலின் பிடிப்பார்.
எப்படியான சவால்கள் வந்தாலும் அதனை நேரடியாக சமாளிக்கும் திறன் அவருக்கு உள்ளது. இரண்டாவது இடத்தை முத்துகுமரன் பிடிப்பார். அவரின் விளையாட்டின் கவனம் மக்களை ஈர்த்துள்ளது. அவர் ஒரு தெளிவான மனிதர். இவர்களில் டைட்டில் வின்னராக தீபக் தெரிவு செய்யப்படுவார். ஏனெனின் அவருக்கு மக்களின் ஆதரவு மற்றும் மற்றவர்களை மரியாதையாக நடத்தும் திறன் உள்ளது...” என கூறியுள்ளார்.
தற்போது விளையாடி வரும் போட்டியாளர்களில் சௌந்தர்யா, விஜே விஷால், அருண் பிரசாத் ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கு தகுதியே இல்லையா? என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |