ஒரே ஒரு போட்டோ... அங்க தான் பிரச்சனை ஆரம்பம்: விசித்ரா உருக்கம்
தன் தோழியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அனைத்திற்குமே காரணம் என வெளிப்படையாக பேசியுள்ளார் பிக்பாஸ் விசித்ரா.
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தவர் விசித்ரா.
வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியுடன் இறுதிகட்டம் வரை விளையாடினார், இறுதி மேடையில் நிச்சயம் விசித்ராவுக்கு இடமுண்டு என பலரும் எதிர்பார்த்த நிலையில் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் Fans Meet ஒன்றில் கலந்து கொண்ட விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.
அதில், நான் எனக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசுவேன் என்று கூறியே நிகழ்ச்சிக்குள் சென்றேன்.
என் குடும்பத்தினர், உறவினர்கள் கூறவேண்டாம் என சொல்லி அனுப்பினர், தப்பு செய்தவர்கள் நிம்மதியாக இருக்கும்போது பாதிக்கப்பட்ட நான் எதற்காக பயப்பட வேண்டும்.
என் குடும்பத்தினர் பேச்சை மீறி நான் சொன்னதுக்கு காரணம், இனி எந்தவொரு பெண்ணுக்கும் இப்படி நடக்கக்கூடாது என்பதற்காக தான்.
23 வருடங்கள் கழித்து பேசியதால், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் எத்தனை ஆண்டுகள் ஆனால் அந்த பெண் ரிவெஞ்ச் எடுப்பார் என தெரிய வேண்டும்.
அப்போது எனக்கு உதவி செய்ய யாருமில்லை, எனக்கான மேடை கிடைத்ததும் நான் சொல்லிவிட்டேன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் பலரும் ஏன் கூறினீர்கள் என கேட்டார்கள், சில நானே ஏதோ கதை சொல்கிறேன் என பேசுகிறார்கள், என்னை நானே அசிங்கப்படுத்தி கொள்வதற்கு எனக்கு என்ன அறிவு இல்லையா, அதை நான் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், திருமண நிகழ்வில் தன் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானதே மீண்டும் சினிமாவுக்குள் வர காரணமாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படத்தால் தான் பிரச்சனை ஆரம்பமானது, அது வரை நிம்மதியாக இருந்தேன், மீண்டும் சினிமாவுக்குள் வரவும் அதுவே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.