கொரோனாவால் இறந்த நடிகருக்கு வெற்றி மாறன் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ! ஆறுதல் கூறும் ரசிகர்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமும், திரைப்பிலங்களின் இறப்பு செய்தி வெளியாகி மக்களிடையே அச்சத்தை மேலும் கூட்டுகிறது. அந்த வகையில், நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார்.
இவர், சமீபத்தில் அசுரன் படத்தின் மூலம் சிறந்த நடிப்பை வெளிக்காட்டிருந்தார். இவரின் மறைவுக்கு பல பிரபலங்கல் இரங்கல் தெரிவித்த நிலையில் அசுரன் படத்தை இயக்கிய வெற்றி மாறன் கண்ணீருடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், "நடிகர் நிதீஷ் வீராவை, 'புதுப்பேட்டை' படத்தில் நடித்து கொண்டிருக்கும் காலத்திலேயே தனக்கு தெரியும்...
தனுஷை வைத்து நான் படம் இயக்க உள்ள தகவலை அறிந்து வந்து என்னுடன் பேசினார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்கிற தகவல் நண்பர்கள் மூலமாக வந்தபோது, இன்னும் இரண்டு நாட்களில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வரும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இன்று காலை 6 மணிக்கு அவர் உயிரிழந்தார். மேலும், அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும் ,என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கொரோனா என்கிற நோய் தொற்று கடந்த ஆண்டு தலை தூக்கிய போது, இது சாதாரண ஒன்று தான் என நானும் நினைத்தேன். ஆனால் இந்த ஆண்டு, நமக்கு நெருக்கமான பல இழப்புகள் நேரத்து வருகிறது.
எனவே தயவு செய்து அனைவரும் முக கவசம் அணிவது மிகவும் முக்கியம். அதே நேரத்தில் முகக்கவசம் சரியாக போடவேண்டியதும் முக்கியம் பலர் மூக்கிற்கு கீழ் முகக்கவசம் அணிகிறார்கள் அதனால் எந்த பயனும் இல்லை நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் உண்டு.
எனவே உரிய முறையில் மாஸ்க் அணிய வேண்டும். இப்படி மாஸ்க் அணிவதால் கொரோனா தொற்றை 70 சதவீதம் கட்டு படுத்த முடியும் என ஆராச்சியில் தெரிய வந்துள்ளது.
அதே போல் லேசான தொற்று இருக்கும் போதே, மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆக்சி மீட்டர் வைத்து செக் பண்ணும் போது, ஆச்சிஜன் அளவு குறைவாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவ மனையை அணுக வேண்டும் என கூறியுள்ளார்.
முகநூல் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இனியும் அலட்சியம் இல்லாமல் ஒன்று கூடி கொரோனாவை விரட்ட வேண்டும் மக்களே......
[