இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
பொதுவாக வீட்டில் யாருக்காவது சளி, இரும்பல், தொண்டை வலி ஏற்பட்டால் அதற்கு தீர்வாக வெற்றிலை தான் கொடுப்பார்கள்.
ஆனால் பலரும் வெற்றிலையை சாப்பிட மறுப்பார்கள் விரும்ப மாட்டார்கள். இவர்களுக்கு வெற்றிலையை வைத்து உணவு செய்து கொடுக்கலாம்.
பொதுவாக பூண்டு சாதம் செய்ய அனைவருக்கும் தெரியும் பதிவில் பூண்டும் வெற்றிலையும் சேர்த்து வெற்றிலை பூண்டு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- சமையத்த சாதம் - 1/2 கப்
- வெற்றிலை - 2
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
- பூண்டு - 7-8
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- வறுத்து அரைக்க பெருஞ்சீரகம், சோம்பு, கருப்பு எள்ளு, மிளகு - 1 தேக்கரண்டி
- கிராம்பு - 1
- சிவப்பு மிளகாய் - 1
- கறிவேப்பிலை - 1 துளிர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பெருஞ்சீரகம், சோம்பு, கருப்பு எள்ளு, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
தீ குறைவாக இருக்க வேண்டும். இதை ஆற வைத்த பின்னர் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
பூண்டை தோலுரித்து நசுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும்.
2 பெரிய வெற்றிலையை சிறிய துண்டுகளாக நறுக்கி, பாத்திரத்தில் போட்டு வதக்க வேண்டும்.
2 நிமிடம் வதக்கிய பிறகு, சிறிது உப்பு சேர்க்கவும். பச்சை வாசம் போனதற்கு பிறகு வேகவைத்த அரிசியை அதில் சேர்க்கவும்.
அத்துடன் அதில் அரைத்த மசாலா தூள் சேர்க்கவும். சாதம் உடையாமல் இருக்கும் படி, மென்மையாக கடாயில் வைத்தப்படி கலக்கவும்.
இதை அப்பளம் அல்லது ஏதேனும் காய்கறி கறியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
