புத்தாண்டில் நிகழும் முதல் சுக்கிரன் பெயர்ச்சி... பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசியினர்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களில் சுக்கிரன் செல்வம், அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் அதிபதியாக இருப்பதால் சுக்கிரன் பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
ஒருவருடைய ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றால் அவர்களின் வாழ்வில் பணத்துக்கும் செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி 04 ஆம் திகதி சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு இடமாற்றம் அடையப்போகின்றார்.
குறித்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நிதி மற்றும் செல்வத்தில் உயர்வை கொடுக்கப் போகின்றார்.
அப்படி சுக்கின் ஆசியால் பண வெள்ளத்தில் மூழ்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நிதி ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சமூகத்தில் மரியாதை உயரும். தொழிலில் பதவி உணர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.ஆரோக்கியம் நன்றாக இருப்பதுடன் மனதில் தெளிவு பிறக்கும்.
பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும். சிலருக்கு புதிய கார், வீடு, சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கூடி வரும். மொத்தத்தில் இவர்களுக்கு பொற்காலமாக அமையப்போகின்றது.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி வாழ்வில் பல வகையிலும் சாதக மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.
சுக்கிரனின் ஆசியால் தொட்டதெல்லாம் பொன்னாகும் சிறந்த தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெறக்கூடியதாக இருக்கும். ஆன்மீக விடயங்களில் அதிக ஈடுப்பாடு காட்டுவீர்கள்.
இந்த ஆண்டில் சுக்கிரன் ஆசியால் நிதி ரீதியில் அசுர வளர்ச்சி உண்டாகும். இந்த ராசியினர் வாழ்வில் இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.
இவர்களுக்கு புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தானாகவே கூடிவரும்.
சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு அமையும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் அதிக பணம் சேரும் வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |