சுக்கரனின் நட்சத்திர பெயர்ச்சி : நாளை முதல் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்ககை ஆரம்பம்!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் நிலையானது ராசிப்பலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
ஏனெனில் கிரகங்ளின் ராசி, நட்சத்திர பெயர்ச்சி மற்றும் ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் இணைப்பால் உருவாகும் அரிய ராஜ யோகங்கள் என்பன அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும்.

அந்தவகையில், சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து வரும் நிலையில், நாளை ஏப்ரல் 27 ஆம் திகதி சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகின்றார்.
இந்த ரோகிணி நட்சத்திரமானது அழகு, அன்பு, படைப்பாற்றலைக் குறிக்கிறது. குறித்த சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் அதிகளவான சாதக நன்மைகளை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் கணிசமான சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
குறிப்பாக தொழில் வழ்க்கையில் இவர்களின் வளர்ச்சி இந்த காலகட்டத்தில் அபரிமிதமாக இருக்கப்போகின்றது.
இந்த ராசியினருக்கு நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகப்போகின்றது.
கடகம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடகம் ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல்வேறு வழிகளிலும் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகின்றது.
அரசு சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு அமோக முன்னேற்றம் ஏற்படும். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சிகரமான நாட்களை அனுபவிக்கப்போகினறார்கள்.
சுக்கிரனின் செல்வாக்கு உங்கள் மீது அதிகமாக இருப்பதால், திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும்.
ரிஷபம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அமோகமான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
இவர்களின் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்ச்சிகள் கைகூடும்.
புதிய நட்புகளால் நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு உறவுகளால் பெரிய தொகை பணம் கைக்கு வரும். மொத்தத்தில் இவர்களின் வாழ்ககையில் பொற்காலம் ஆரம்பம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |