பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு அவற்றின் நட்சத்திர மாற்றமும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜூன் மாதத்தில் பல கிரகங்கள் தங்களது நட்சத்திர நிலையை மாற்றவுள்ளன.
அந்த வகையில், ஜூன் 11ஆம் தேதி சுக்கிர பகவான் சனிபகவானால் ஆளப்படும் பூசம் நட்சத்திரத்தில் நுழைகிறார். அவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை அதே நட்சத்திரத்தில் பயணிக்கவுள்ளார்.

இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை வழங்கும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி தொழில் மற்றும் நிதி நிலையில் உச்ச பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதி என்பதால், இந்த நட்சத்திர மாற்றத்தின் பலன்களை ரிஷப ராசிக்காரர்கள் நேரடியாக அனுபவிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்க வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மேலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும்.குறிப்பாக நிதி நிலையில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகின்றது.
குறிப்பாக நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ள இது சாதகமான காலமாக இருக்கும். பல வழிகளிலும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். குடும்ப வாழ்க்கையிலும் மனநிறைவும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பல நாட்களாக எதிர்பார்த்திருந்த சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் பல நேர்மறையான பலன்களை கொடுக்கப்போகினன்றது .புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
பொருளாதார நிலை முன்பைவிட வலுவடையும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட சில விஷயங்களை அடையக்கூடிய சூழல் உருவாகும்.
மேலும், உங்களைப் பற்றிய தவறான புரிதல்கள் மற்றும் எதிர்மறையான கருத்துகள் படிப்படியாக மறைந்து, சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். திருமண வாழ்க்கையில் இதுவரையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |