சுக்கிர பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், நவகிரகங்களில் அசுரர்களின் குருவாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் சுக்கிரனின் நிலை மாறும்போது, ஒருவரின் நிதி நிலை மற்றும் உறவுகளில் அதன் தாக்கம் வெளிப்படும் என நம்பப்படுகின்றது.
தற்போது கன்னி ராசியில் பயணிக்கும் சுக்கிரன், நவம்பர் 22 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். அங்கு 2027 ஜனவரி 1 ஆம் தேதி வரை சஞ்சரிக்கவுள்ளார்.சுக்கிரன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் இந்தப் பெயர்ச்சி சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைத்தாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சிறப்பான நிதி ஆதாயங்களையும் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சியையும் பெறப்போவதாக ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி சுக்கிரனின் ஆசியால் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் 3ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், கடினமான பணிகளை முடிக்கும் துணிச்சலும் தானாகவே ஏற்படும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைப்பதுடன், உயர் அதிகாரிகளின் பாராட்டுகளும் கிடைக்கும்.
சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். தொழிலதிபர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை வலுப்பெறும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். பயணங்களால் ஆதாயம் கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால் நிதிநிலை மேம்படும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் உருவாகும்.
ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பதுடன், தேவைகளுக்கு ஏற்ப செலவழிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இது சாதகமான காலமாக அமையும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவு மேம்படுவதுடன், மறக்க முடியாத அழகான தருணங்களையும் அனுபவிக்க வாய்ப்பு அமையும்.
கடகம்

கடக ராசியின் 4ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும் யோகம் காணப்படுகின்றது.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பெற்றோருடனான உறவு மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பணியிடத்தில் கடின உழைப்புக்குப் பாராட்டுகள் கிடைப்பதுடன், பதவியிலும் முன்னேற்றம் ஏற்படலாம். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மொத்தத்தில் இந்த காலகட்டம் பொற்காலமாக அமையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |