சுக்கிரனின் ராசி மாற்றம்: ஜூலை 4 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் அசுரர்களின் குருவாகக் கருதப்படுபவர் சுக்கிர பகவான். அழகு, ஆடம்பரம், காதல், திருமண வாழ்க்கை, கலை, வசதி, செல்வம், செழிப்பு மற்றும் சுகபோகங்கள் ஆகியவற்றின் காரக கிரகமாக சுக்கிரன் போற்றப்படுகிறார்.

ஒருவரின் வாழ்க்கையில் பொருளாதார வளம், ஆடம்பரமான வாழ்க்கை முறை, கலைத் திறன் மற்றும் உறவுகளில் மகிழ்ச்சி போன்றவற்றை தீர்மானிப்பதில் சுக்கிரனின் நிலை முக்கிய பங்கு வகிப்பதாக ஜோதிடம் கூறுகிறது. சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக உள்ளார்.
பொதுவாக இவர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த நிலையில், ஜூலை 4 ஆம் தேதி அவர் சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடையவுள்ளார்.

சிம்ம ராசியின் அதிபதியான சூரியனின் வீட்டில் சுக்கிரன் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை தங்கி, அதன் பின்னர் கன்னி ராசிக்குள் நுழைவார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தினாலும், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உச்சகட்ட பலனை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவிவில் பார்க்கலாம்.
மேஷம்

சுக்கிரன் மேஷ ராசியின் 5-வது வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். இதன் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட போகின்றது.
குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் காண வாய்ப்புள்ளது.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் சூழல் உருவாகும். தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிலுவையில் இருந்த முக்கியமான வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும்.
கடகம்

சுக்கிரன் கடக ராசியின் 2-வது வீட்டிற்கு செல்கிறார். இதனால் நிதி நிலைமை மேம்படும். நீண்டகாலமாக இருந்த பணப் பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
வருமானம் அதிகரித்து, சேமிப்பும் உயர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கொள்ளும் பெரும்பாலான முயற்சிகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கக்கும்.
சிம்மம்

சுக்கிரன் சிம்ம ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்கள் ஆளுமை மேலும் மெருகேறும். தன்னம்பிக்கை அதிகரித்து, சமூகத்தில் உங்கள் மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
புதிய தொழில் அல்லது வணிகம் தொடங்க திட்டமிட்டிருந்தால், இந்த காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும்.
அவர்களின் ஒத்துழைப்பால் முக்கிய முயற்சிகளில் நல்ல வெற்றியைப் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணப்போகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |