சுக்கிர பெயர்ச்சியால் பணமழையை பெறும் ராசி யார்? 12 ராசியின் பலன்கள் இதோ
நவ கிரகங்களில் ஒன்றான சுக்கிரனின் பெயர்ச்சியால் பணமழையை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன்
நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் கிரகம், அசுரர்களின் குருவாக கருதப்படுகின்றார்.
சுக்கிரனின் ஆசி மட்டும் இருந்தால் செல்வம் பெருகும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும், காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும் செய்வாராம்.
இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றக்கூடிய இவர் தற்போது மகர ராசியில் பயணித்து வருகின்றார்.
இந்நிலையில் மார்ச் 07ம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். சனியும், சுக்கிரனும் நட்பு கிரகங்களாகும்.
ஆகையால் சனியின் ராசிக்குள் செல்லும் சுக்கிரன் சிறப்பான பலனை தருவதுடன், கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனின் தாக்கமானது அனைத்து ராசிக்கும் இருக்குமாம்.
எனவே மார்ச் மாதத்தில் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசியினரின் பலன்களை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியில் 11வது வீட்டிற்கு சுக்கிரம் செல்லும் நிலையில், வருமானம் அதிகரிப்பதுடன், நீண்ட காலமாக வராத பணமும் கைசேறும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமும், திருமண வாழ்க்கை இனிமையாகவும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினைப் பொறுத்தவரையில் 10வது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சிக்கு பின்பு வாய்ப்பு கிடைக்கும். பரம்பரை சொத்து பிரச்சினை தீரும். அவமானப்படுத்த நினைத்தவர்களும் தற்போது உதவுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் 9வது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதுடன், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள், செயல்கள் அனைத்தும் பாராட்டப்படுவதுடன், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லவும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியினரைப் பொறுத்தவரையில் 8வது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால் ஆரோக்கிய பிரச்சினையை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பண வரவு இருக்கும். சொத்து பிரச்சினை தீருவதுடன், திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு வேலை செய்தால் அதிக வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினரைப் பொறுத்தவரையில் 7வது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், அனைத்து வகையிலும் சிறப்பாக இருப்பதுடன், திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளதுடன், விருந்தினர்களின் வருகையால் வீட்டின் சூழல் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
கன்னி
சுக்கிரன் கன்னி ராசியின் 6வது வீட்டிற்கு செல்லும் நிலையில், குறித்த ராசியினர் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டிவருவதுடன், ரகசிய எதிரிகளும் அதிகரிப்பார்கள். உடல்நலத்தில் கவலைகள் அதிகரிக்கும். கடன் யாருக்கும் அதிகமாக கொடுக்க வேண்டாம். ஏனெனில் நிதி இழப்பை சந்திப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியினரைப் பொறுத்தவரையில் சுக்கிரன் 5வது வீட்டிற்கு செல்கின்றார். இதனால் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பெரிய வேலையை தொடங்க ஒப்பந்தம் செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினரைப் பொறுத்த வரையில் 4வது வீட்டிற்கு செல்கின்றார் சுக்கிரன். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நல்ல செய்தியை பெறும் இந்த ராசியினர், பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சொத்து பிரச்சினை தீருவதுடன், சில காரணங்களால் மன உளைச்சல் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியில் சுக்கிரன் 3வது வீட்டிற்கு செல்லும் நிலையில், இந்த ராசியினர் எடுக்கும் எந்த முடிவும் சமூகத்தில் பாராட்டப்படும். அரசியலில் இருப்பவர்கள் தேர்தல் தொடர்பான முடிவை எடுத்தால் சாதகமாக இருக்கும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியினரைப் பொறுத்த வரையில் சுக்கிரன் 2வது வீட்டிற்கு செல்கின்றார். இத்தருணத்தில் நிதி நிலை வலுபெறுவதுடன், நீண்ட நாட்களாக கொடுத்த பணம் திரும்பவும் கிடைக்கும். பேச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயல்பட்டால் வெற்றியடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வலது கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியினரின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லும் நிலையில், இந்த காலத்தில் பெரிய வேலையை தொடங்கினால் வெற்றி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மற்றும் பயணங்களுக்கு அதிக செலவுகள் ஏற்படும்.
மீனம்
மீன ராசியினரின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், பயணங்களுக்கு அதிக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இடது கண் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும். எந்த பிரச்சனைகளையும் பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |