சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம்: உச்ச பலனை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!
நவகிரகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், ஆகஸ்ட் மாத இறுதியில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழ உள்ளன.
ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதியம் 12:55 மணிக்கு சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார்.அவர் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை சித்திரை நட்சத்திரத்தில் பயணிப்பார்.

உறவுகள், நிதிநிலை, தொழில், செல்வம், அழகு மற்றும் தனிப்பட்ட கவர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாக சுக்கிரன் கருதப்படுவதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஜோதிடத்தில் தைரியம், ஆற்றல், செயல்திறன் மற்றும் மன உறுதியைக் குறிக்கும் செவ்வாய் கிரகமே சித்திரை நட்சத்திரத்தின் அதிபதியாகும். எனவே, சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம், சுக்கிரனின் தன்மைகளும் செவ்வாயின் ஆற்றலும் இணையும் காலமாகக் கருதப்படுகிறது.
இந்த கிரக நிலை சில ராசிக்காரர்களுக்கு உறவுகளில் முன்னேற்றம், நிதிநிலையில் சாதகமான மாற்றங்கள், தொழில் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றம் போன்ற பலன்களை பெறப்போகின்றார்கள். அப்படி உச்சகட்ட பலனை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சுக்கிரன் அதிபதியாக இருப்பதால், இந்தப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை கொடுக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
எதிர்பாராத பணவரவு கிடைத்து நிதிநிலை மேம்பட வாய்ப்புள்ளது. நீண்டகால குடும்ப மற்றும் உடல்நலப் பிரச்சினைகளிலும் நிம்மதி உண்டாகும்.
மேலதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமான புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரப் பெயர்ச்சி தனிப்பட்ட வசீகரத்தையும் பணியிட அங்கீகாரத்தையும் அதிகரிக்கும்.
தொழிலில் நீடித்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, நிதிநிலை சீராகும். வருமானம் அதிகரிப்பதுடன் செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். ஒட்டுமொத்தமாக வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக அமைய வாய்ப்புள்ளது.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். வேலை செய்பவர்களுக்கு அங்கீகாரம், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் தங்கள் முயற்சியால் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம்.
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதுடன், புதிய சொத்து வாங்கும் வாய்ப்பும் உள்ளது. உடல் ஆரோக்கியமும் சாதகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |