சுக்கிரனுடன் சேரும் அழிவு கிரகம் சனி.... அசுர பலனடையும் 4 ராசியினர் யார்?
சனி நீதி தேவனாக ஒருவரின் பாவம், புண்ணியத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ற பலன்களைத் தரக்கூடியவர்.
தீங்கு செய்தால் சனியின் அழிவு பார்வை உங்கள் மீது விழும். ஆனால் சுக்கிர பகவானோ ஒருவருக்கு அன்பையும், அழகையும், செல்வம், சுகத்தைத் தரக்கூடியவர்.
இரண்டு கிரகங்களும் நண்பர்கள். இருப்பினும் இவர்கள் அமைந்து இடத்தைப் பொருத்து தான் நற்பலனோ அல்லது கெடுபலன்களோ தரவல்லவர்கள்.
சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை அதுவும், சனி ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற மகர ராசியில் நிகழ்வது பல ராசியினருக்கு அசுப பலன்களையே தரும்.
அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்
சனி - சுக்கிர சேர்க்கையால் மேஷ ராசியினரின் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளைப் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கவும், அதன் மூலம் சம்பள உயர்வு கிடைத்தல் போன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
உங்கள் தொழில், வியாபாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட வெற்றியையும், ஆதாயத்தையும் பெற்றிட முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி அதிபதியான சுக்கிரன், ஆறாம் வீட்டு அதிபதியும் ஆவார். இவர் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானம், தந்தை ஸ்தானம் எனப்படும் மகரத்தில் பெயர்ச்சி ஆவதால் உங்கள் ராசிக்கு ஆன்மிகம், வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்ட அதிர்ஷ்ட பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.
அதோடு உங்களின் தொழிலில் நல்ல சிறப்பான வெற்றியை உங்களின் கடின உழைப்பின் மூலம் அடைந்திட முடியும்
தனுசு ராசி
உங்களின் நிதி நிலை மேம்படுவதோடு பணத்தை சேமிப்பதற்கான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த சுக்கிர பெயர்ச்சியின் காரணமாக உங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் பெற்றிடுவீர்கள்.
தொழிலை முன்னோக்கி கொண்டு செல்ல ஏதாவது முதலீடு செய்ய நினைத்தாலும் வெற்றி கிடைக்கும்.
மீன ராசி
மீன ராசிக்கு 3 மற்றும் 8ம் வீட்டு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியான சுப பலன்களை நீங்கள் அடைந்திடுவீர்கள்.
நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களின் தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.