கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி் : ஜூன் 8 முதல் இந்த 3 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது!
ஜோதிட ரீதியில் கிரகங்களின் பெயர்ச்சியானது ராசிபலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் நவகிரகங்களின் நிலையில் ஏற்ப்படும் மாற்றமானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், அசுரர்களின் குருவாக கருதப்படும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன் பெயர்ச்சிக்கு ராசிப்பலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்வம் கொடுக்கப்படுகின்றது. சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் வரை இருப்பார்.

தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் ஜூன் 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனின் ராசிக்கு சுக்கிரன் செல்வது ஜோதிட ரீதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த விடயமாக பார்க்கப்படுகின்றது.
குறித்த சுக்கிரன் பெயர்ச்சியானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கங்களை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும் பொருளாதார ரீதியில் உச்ச பலனை பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியில் 3-ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவிக்க வாய்ப்புள்ளது. வருமானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படும்.
கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. தொழில் புரிபவர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பலன்களை வழங்கும்.
சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படக்கூடும். மேலும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். பணவரவுக்கு பஞ்சமே இருக்காது.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் முதல் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால், ஜூன் 8 முதல் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடும். வருமானம் அதிகரித்து, பண வரவு மேம்படும்.
ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பதுடன், பல்வேறு பொருள் வசதிகளும் கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும்.
பரம்பரைச் சொத்துகள் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்தச் சொத்துகள் கைக்கு வந்து சேரும் வாய்ப்பும் உள்ளது.
துலாம்

துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியின் போது 10-ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதார வசதிகள் மேம்பட்டு, ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |