ஜுலை மாதத்தில் இறுதியில் சுக்கிரன் பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினர் இவர்கள் தானாம்
சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி
அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணமாக இருக்கும் சுக்கிரன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தினை மாற்றுவார்.
சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் ஏற்படும். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வரும் நிலையில், ஜுலை 29ல் உத்திரம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார்.
குறித்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இருக்கின்றார். உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால், குறித்த நட்சத்திரத்தில் சூரியன் செல்வதால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியினால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெறுவதுடன், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் வாழ்வில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பணப்பிரச்சனை தீர்வதுடன், குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்குமாம். மன அழுத்தம் குறைந்து, மன அமைதியும் அதிகரிக்கும்..

மிதுனம்
சுக்கிரன் பெயர்ச்சியினால் மிதுன ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதுடன், நீண்ட காலமாக தடைபட்ட வேலையும் வெற்றியாக முடியும்.
தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும்

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்குமாம். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
புதிய வழிகளிலிலிருந்து பணம் தேடி வருவதுடன், நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படும்.

மகரம்
மகர ராசியினருக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிதி ரீதியான நல்ல பலனை அளிப்பதுடன், முன்னேற்றமும் ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாகும்.
வருமானத்தில் உயர்வு, ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனை பெற முடியும்.
காதல் வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன், மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |