அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: இந்த ராசிகளின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், அக்டோபர் மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. அதில் சுக்கிரனின் இயக்கமும் முக்கியமானதாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன.நவகிரகங்களில் சுக்கிரன் அழகு மற்றும் உறவுகளின் அதிபதியாகக் கருதப்படுகிறார்.
எனவே, சுக்கிரனின் இயக்க மாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அக்டோபர் 3ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசியில் வக்ர இயக்கத்தைத் தொடங்குகிறார்.
இதனால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கம் இருந்தாலும், சில ராசியினருக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கப் போகின்றன. அப்படி சுக்கிரனால் அதிகளவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள், சுக்கிரனின் இந்த வக்ர இயக்கத்தால் எதிர்பாராத நன்மைகளைப் பெறப்போகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தும், நற்பெயரும் அதிகரிக்கும்.
பணியிடத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், சக ஊழியர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெறலாம். அதேபோல், வியாபாரிகளுக்கும் இந்தக் காலகட்டம் சிறப்பான பலன்களைத் தரும்.
குறிப்பாக, மார்க்கெட்டிங், ஊடகம் மற்றும் எழுத்துத் துறைகளில் பணிபுரிபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொடர்பான பிரச்சினைகள் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்த தருணங்கள் அமையும். சுக்கிரனின் அருளால் உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படும்.
துலாம்

துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பதால், இந்த கிரக மாற்றம் அவர்களுக்கு நேரடியான பலன்களை வழங்கும்.
சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி, அவர்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. இந்த சக்திவாய்ந்த கிரக மாற்றத்தின் மூலம் வணிகத் துறையில் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மேலும், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் கணிசமான வருமானத்தையும் ஈட்ட முடியும். பல்வேறு முதலீடுகளிலிருந்தும் வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டிற்குத் தேவையான சில ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் சூழல் உருவாகும்.
விருச்சிகம்

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசியில் நிகழ்வதால், இந்த ராசிக்காரர்கள் பல நேர்மறையான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் அவர்களின் செயல்திறனும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியில் சிறப்பாகச் செயல்படுவதற்கான பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.மேலும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
வணிகர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக, நிலம், சொத்து அல்லது கட்டிடம் தொடர்பான தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |