அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: பொற்காலத்தை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!
வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், அழகு, காதல், செல்வம், ஆடம்பரம் மற்றும் செழிப்பின் காரணியாகக் கருதப்படுகிறார்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான துலாமில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி முதல் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார். சுமார் 42 நாட்கள் நீடிக்கும் இந்த வக்ரப் பயணம், நவம்பர் 14ஆம் தேதி முடிவடைந்து சுக்கிரன் மீண்டும் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குவார்.
சுக்கிரனின் இந்த வக்ரப் பயணம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக, சுக்கிரன் வக்ர நிலையில் இருப்பதால் சில ராசிக்காரர்கள் சவால்களையும், சில ராசிகள் சாதக பலன்களையும் பெறப்போகின்றார்கள்.
அப்படி சுக்கிரனின் வக்ரப் பயணத்தால் தொழில் மற்றும் நிதி நிலையில் பொற்காலத்தை அனுபவிக்கப் போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் 4-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை நிச்சயம் கொடுக்கும்.
இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். நீண்ட காலமாக சிரமத்தை ஏற்படுத்தி வந்த உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். நீண்ட காலமாக நடைபெற்று வந்த நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளின் மூலம் எதிர்பாராத நிதி நன்மைகளையும் பெறக்கூடும். வீட்டுச் சூழலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மன அழுத்தம் குறைவதால், மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
மிதுனம்

மிதுன ராசியின் 5-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிலர் கடந்த காலத்தில் செய்த முதலீடுகளின் மூலம் பெரியளவில் லாபம் அடைவார்கள்.
இதன் மூலம் நிதி நிலைமை வலுப்பெறுவதுடன், கடன் தொல்லைகளிலிருந்தும் விடுபட வாய்ப்பு உண்டாகும். இந்தக் காலகட்டத்தில், உங்களுடைய திட்டங்களைச் சரியான முறையில் செயல்படுத்தினால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.
மகரம்

மகர ராசியின் 10-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்பு காணப்படுகின்றது. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
புதிய வருமான வழிகளும் உருவாகக்கூடும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
குறிப்பாக, ஊடகம், ஃபேஷன் மற்றும் கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் தானாக அமையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |