சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் 5 ராசிகள்!
வேத ஜோதிடத்தில் அழகு, காதல், செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அசுரர்களின் குருவாகவும் கருதப்படும் இவர், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார். அவரது நிலை மாறும்போது, அனைத்து ராசிகளின் நிதி நிலையிலும் தாக்கம் ஏற்படுவதாக ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில், செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைந்துள்ளார்.

இதனால் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் செல்வம், செழிப்பு, கௌரவம், பொருளாதார வசதி, காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தின் சிறப்பான ஆதரவைப் பெறவுள்ளனர்.
மேலும், இந்த யோகம் நவம்பர் 6ஆம் தேதி வரை நீடிப்பதால், அதுவரை இந்த 5 ராசிக்காரர்களுக்கும் பொற்காலமாக அமையப் போகிறது. சுக்கிரனால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் அந்த 5 ராசிகள் யாவை என்பதை தற்போது பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 5-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, வாழ்க்கைத்துணையுடனான உறவு வலுப்படும்.
பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசியின் 2-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, நிதி நிலை உயரும். தேவையற்ற செலவுகள் கட்டுப்படும்.
சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
தனுசு

தனுசு ராசியின் 11-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் அடுத்த 2 மாதங்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாகவும் இந்த காலம் சிறப்பாக இருக்கும்.
மீனம்

மீன ராசியின் 8-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவடையும். இருப்பினும் தவறான செயல்களில் ஈடுபடாமல், வேலையில் நேர்மையாக இருப்பது அவசியம்.
அவ்வாறு செயல்பட்டால் நல்ல உயரத்தை அடையலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் ஆளுமையும் வசீகரமும் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் உங்கள் கருத்துகளை திறம்பட வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நிதி நிலை வலுப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |