1 வருடத்திற்கு பின் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: முன்னேற்ற கதவு திறக்கப்போகும் 3 ராசிகள்
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த பெயர்ச்சியால் தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் இவர்களிடம் மன உறுதி அதிகமாகவே இருக்கும். வாழ்க்கையின் இலக்கை அடைய தீவிரமாக முயற்சிப்பார்கள். இவர்களின் உழைப்பில் அதிகமான பணத்தை சம்பாரிப்பார்கள். இவர்களின் தீவிர முயற்சியால் இலக்கு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.
2. துலாம்
துலாம் ராசியில் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இவர்கள் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுவர். இவர்கள் சாதிக்க நினைக்கும் துறையில் பல முயற்சிகள் செய்திருப்பார்கள். இதற்கான பலனாக ஆசை கூடிய விரைவில் நிறைவேறும். சிறு வயது முதல் தன்னுடைய ஆளுமை பண்பை வளர்த்துக் கொண்டதால் பணம் சம்பாதிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
3. தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் வெளிநாட்டில் இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும். அத்துடன் அவர்களுக்கு இயல்பாகவே ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இதனால் பணத்தை இலகுவாக சம்பாரித்து விடுவார்கள். தனுசு ராசியினரின் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு தான் இருக்கும். எளிதில் சம்பாதித்து பணக்காரர்களாக மாற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).