Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைப்பது வரமாம்..உங்க தேதி என்ன?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட திகதிகளில் பிறந்த பெண்கள் வணிகத்தில் சிறந்து விளங்குவார்கள். அத்துடன்அவர்களை சார்ந்திருப்பவர்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள். அப்படியான பெண்கள் என்னென்ன திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 2 பிறந்த பெண்கள்
- 12 மாதங்களில் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகளின் கூட்டெண் 2 ஆக இருக்கும். இவர்களின் மூல எண்ணின் அதிபதியாக சந்திரன் இருப்பார். இதனால் இவர்களின் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள்.
- உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் முன்னோக்கி சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள்.
- பிறவியிலேயே படைப்பாளியாக இருக்கும் இவர்கள் புத்தாக்கங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
- அபாரமான சிந்திக்கும் திறன் இந்த பெண்களிடம் இருக்கும்.
- மற்றவர்களை அதிகமாக கவரும் நபர்களாக சமூகத்தில் இருப்பார்கள்.
- எண் 2 பிறந்தவர்கள் நிதி நிலையில் மிகவும் நன்றாக இருக்கும்.
- அவர்களின் பல நேர்மறையான குணங்கள இருக்கும். இதனாலேயே செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.
குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?
- எண் 2 இல் பிறந்த பெண்கள் குடும்ப வாழ்க்கை புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு தேவையற்ற பிரச்சினைகளை குறைத்து கொள்வார்கள்.
- குடும்பத்திலுள்ளவர்களிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வார்கள்.
- எந்த வீட்டிற்குச் சென்றாலும், அங்கு சுகமும் ஆசீர்வாதமும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
- இந்த திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |