வெங்கடேஷ் பட்டின் ஸ்டைலலில் காலி ப்ளவர் மசாலா இப்படி செய்ங்க!
வெங்கடேஷ் பட் நம் எல்லோருக்கும் தெரிந்த செஃப். இவர் குகு வித் கோமாளியில் நடுவராக பணியாற்றி வந்தார். தற்போது இவர் செய்த ரெசிபிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.
அந்த வகையில் காலி ளவர் மசாலா எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதை அனைத்து விதமான உணவுகளுடனும் வைத்து சாப்பிடலாம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
- 3 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1 கை பிடி பூண்டு
- கால் கப் தண்ணீர்
- காளிபிளவர் 1 பூ
- 4 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 3 தக்காளி நறுக்கியது
- அரை ஸ்பூன் மஞ்சள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- அரை ஸ்பூன் கரம் மசாலா
- அரை கப் தயிர்
செய்முறை
வெங்காயத்தை நறுக்க வேண்டும். மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து கிளரவும்.
தொடர்ந்து இதில் தக்காளியை சேர்த்து கிளரவும். தக்காளி வெந்ததும், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வேக வக்கவும்.
காளிபிளவர் தண்ணீரில் வேக வைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து தயிரை நன்றாக கலந்து அதை சேர்க்கவும். தொடர்ந்து கொத்தமல்லி இலை சேர்த்து கிளரவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |