சிம்பு ரசிகர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் - மாநாடு ரீலீஸ் கண்பார்ம்; வெங்கட் பிரபு ட்வீட்!
நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கதில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இந்த படத்தை, ஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர்.
சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏறபடுத்தியிருக்கிறது. இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவிருந்து, ஆனால் பின்னர் நவ.25ஆம் தேதிக்கு (நாளை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர், திடீரென மாநாடு படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது இந்தச் சூழலில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றைத் தனது ட்விட்டரில் பகிர்ந்ததுள்ளார்.
அதில், மாநாடு திரைப்படத்திற்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, #MaanaaduFrom25thNovember #maanaadu ஆகிய ஷேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளார்,
மேலும், இத்திரைப்படம், வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள மாநாடு போஸ்டரிலும் படம் நாளை வெளியாகும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாவது உறுதியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.