இனி சர்க்கரை நோய் குறித்து கவலை வேண்டாம்! இந்த தண்ணீர் குடித்தால் மட்டும் போதும்
பொதுவாக சமையல் தட்டிலுள்ள சிலப் பொருட்கள் நமக்கு இருக்கும் தீராத நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இதனால் தான் நமது முன்னோர்கள் சில பொருட்களை கறிகளில் சேர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டை வைத்திருந்தார்கள்.
இதிலிருக்கும் வெந்தயம் உடல் எடை குறைப்பு, உடல் சூடு குறைப்பு, வயிற்றுவலி, சக்கரை நோயாளர்களுக்கு சக்கரை அளவு குறைப்பு என எமது உடலிலிருக்கும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும், வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து , மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தான் மூலிகைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் வெந்தயத்தில் ஒளிந்திருக்கும் மருத்துவ குறிப்புகளும், நோய்களுக்கு வெந்தயத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்பது தொடர்பில் தொடர்ந்து தெளிவாக பார்க்கலாம்.
வெந்தயத்தில் மறைந்திருக்கும் மருத்துவம்
தினமும் இரவில் 1 மேசைக்கரண்டி வெந்தயத்தை எடுத்து தண்ணீர் போட்டு மூடி வைத்து விட்டு, காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம். இந்த நீரை மூன்று வேளைகளும் எடுத்துக் கொள்ளலாம்.
பெண்களின் உடம்பு அதிகம் சூடுடன் இருக்கும் போது அதிகமான வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் காலம் தள்ளிப் போகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிர்ச்சினைகளுக்கு மேற்குறிப்பிட்டவாறு வெந்தய தண்ணீர் குடிக்கலாம்.
தலைமுடி உதிர்வு, தலைமுடி வெடிப்பு, தலைமுடி வளராமை போன்ற பிரச்சினையுள்ளவர்கள் வெந்தயத்தை அரைத்து அதனை தலையில் வைட்டமின் இ மாத்திரைகள் கலந்து பூசினால் காலப்போக்கில் இந்த பிரச்சினைகள் குணமாகும்.
வயிற்றுக்கு சேராத ஏதாவது உணவை எடுத்துக் கொண்டால் உடனே வயிற்றுபோக்கு ஆரம்பித்து விடும். வெந்தயம், சோம்பு, உப்பு ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
சிலருக்கு முகத்தில் பருக்கள் பிரச்சினை இருக்கும். அப்படி பிரச்சினையுள்ளவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் காலப்போக்கில் பருக்கள் மறையும்.