காய்கறி இல்லையா? பத்தே நிமிடத்தில் சுவையான வெந்தயக் குழம்பு செய்யலாம்...
வெந்தயத்தில் அதிகளவு புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன. இது மலச்சிக்கலை நீக்குவதோடு, கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
இத்தனை மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தை கொண்டு அனைவரும் விரும்பும் வகையில் சுவையான வெந்தய குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெந்தயம் - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 20 பல்
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லி தூள் - 1 1/2 தே.கரண்டி
சீராக தூள் - 1/4 தே.கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
எண்ணெய் - தேவையான அளவு
புளி கரைசல் - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். வெந்தயம், கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஊறித்து வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் பூண்டையும் இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்து கண்ணாடி பதத்தில் வதக்கிக்கொள்ள வேண்டும் பின் பொடியாக நறுக்கிய தக்காளியையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சீராக தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து, கிளறிவிடுட வேண்டும்.
பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்கவிட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த வெந்தய குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |