நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி... எப்படி செய்வது?
வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.
வெந்தயக் கீரை இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டுள்ளது. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு உடலுலில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த வெந்தயக் கீரையை கொண்டு அருமையாக சுவையில் எவ்வாறு சப்பாத்தி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
வெந்தயக்கீரை - 1 கைப்பிடியளவு
நெய் - 1 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கடலை மாவை எடுத்த, அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 கைப்பிடி வெந்தயக்கீரையை சேர்த்து, கைகளால் நன்கு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துக்கொள்ள வேண்டும்.அதனையடுத்து அதில், நெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, மூடி வைத்து 20 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும் பின்னர் பிசைந்த மாவை மீண்டும் நன்கு அழுத்தி ஒரு தடவை பிசைந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அந்த மாவை ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, சப்பாத்தி போன்று மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி தயார். இதனை சாப்பிடுவதற்கு சைடு டிஷ்ஷே தேவையில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |