மாரடைப்பை தடுக்கும் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்து பாருங்க
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியன நிறைந்து காணப்படுகின்றது.
இது கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் காணப்படுகின்றது.
இத்தனை ஊட்டச்சத்துக்ளை கொண்ட வெண்டைக்காயில் கார குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
புளி கரைசல் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 4 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
கடலை பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளியை நன்றாக கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வெண்டைக்காயை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்னரட ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் நன்றாக வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சிறிது வதக்கிக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் பிரியும் பதத்தில் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை போனதன் பின்னர் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கினால் மணமணக்கும் சுவையில் மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்டைக்காய் கார குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |