குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிட மறுக்கிறார்களா? ஒருமுறை இப்படி செய்து கொடுங்க தினமும் கேப்பாங்க
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதே தாயின் நோக்கமாகும். ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான உணவை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை.
அதுபோல வெண்டைக்காயை சாப்பிட்டால் மூளை சுறு சுறுப்பாக இருக்கும் மேலும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட வெண்டைக்காயை குழந்தைகள் வெறுப்பார்கள் ஆனால் அதிலே சிப்ஸ் செய்து கொடுத்தால் நன்றாக சுவைத்து சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
- வெண்டக்காய்- 250 கிராம்
- கடலை மாவு - 2 தேக்கரண்டி
- அரிசி மாவு/ சோளம் மாவு - 2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- ஜீரா தூள் - 1 தேக்கரண்டி
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 கரண்டி
செய்முறை
முதலில் போதுமான உப்பு கடலை மாவு , அரிசி அல்லது சோள மாவு , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது, ஜீரா தூள் மற்றும் மிளகு தூள் கலந்து தண்ணீர் பயன்படுத்தி ஒரு கெட்டியான பேஸ்ட் செய்யவும்.
பின்னர் வெண்டக்காயை துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் தயார் செய்து வைத்த மா கலவையை மெல்லிதாக வெண்டைகாயில் தடவி பொறித்து எடுத்தால் சுவையான வெண்டைக்காய் பொறியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |