கர்ப்பமாக இருக்கும் போது இப்படியெல்லாமா புகைப்படம் போடுவீங்க? வில்லி வெண்பாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கர்ப்பமாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா பாத் டப்பில் இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையானவர் ஃபரீனா ஆசாத் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லியாக நடித்து அசத்தி வருகின்றார்.
வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதியும், கண்ணம்மாவும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
பரீனா சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 4 வருடங்கள் கழித்து தற்போது கர்ப்பமாக இருக்கின்றார்.
இதனை சமீபத்தில் அறிவித்த இவர் விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது பாத் டப்பில் இருக்கும்படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கர்ப்ப காலத்தில் குளியல் தொட்டி மிகவும் பாதுகாப்பானது! அசாதாரண போஸ்ட்டை பார்க்கும்போது, மக்கள் எதிர்மறையைப் பரப்பி எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். அதற்கு எந்த பதிலும் கொடுப்பதில்லை. மேலும் எதையும் நீக்குவதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.