நான் இந்த தவற பண்ணியிருக்க கூடாது!! பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா ஓபன் டாக்
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக அசத்திவரும் பரீனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
கர்ப்பமான நிலையிலும், தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
மிரட்டலான வில்லியாக, கண்களை உருட்டி இவர் நடிக்கும் காட்சிகளுக்கு நிஜ வில்லிகளே தோற்றுவிடுவார்கள் போல.
எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரீனா, புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் பரீனா உரையாடினார், அப்போது ரசிகர் ஒருவர், உங்கள் வாழ்க்கையில் நீ்ங்கள் எடுத்த தவறான முடிவு எது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு “நாச்சியார் புரம்” என பதிலளித்துள்ளார், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் இதுவாகும்.
நிஜத்திலும் செம தில்லாக பதிலளித்த பரீனா வாழ்த்துகள் குவிந்து வருகிறது.