பிறந்த குழந்தைக்கு முடி ரொம்ப கம்மியா இருக்கா..? தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவுங்க..! வேகமா வளரும்
தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு தலைமுடி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.
எவ்வளவு கவனமாக இருந்தாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை, அரிப்பு இவற்றில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து விடும்.
இந்த பிரச்சினைகளுக்கு ஆங்கில மருந்துவத்தை நாடுவதை விட வீட்டில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை மருந்தாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
அந்த வகையில் தலையில் இருக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வு என ஆயுள்வேத வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.
இந்த கூற்று உண்மை என்றால் இது குறித்து பூரண விளக்கத்தை தொடர்ந்து நாம் பார்க்கலாம்.
வேம்பாளம் பட்டையை எப்படி பயன்படுத்துவது?
1. தேங்காய் எண்ணெய் மற்றும் வேம்பாளம் பட்டை இவை இரண்டையும் நன்றாக கலந்து தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். 1 மாதத்திலேயே உங்கள் தலைமுடியில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
2. தலைமுடி பிரச்சினை மட்டுமல்ல சரும பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாக இருக்கின்றது.
இதனால் வேம்பாளம் பட்டையை இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றார்கள். மேலும் சரும தொற்றுகள், அழற்சி, தீக்காயங்கள் ஆகிய பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகின்றது.
3.“வெரிகோஸ் வெயின்” என அழைக்கப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு மற்றும் , படுக்கைப் புண்களுக்கு வேம்பாளம் பட்டையை மருந்தாக பயன்படுத்தலாம்.
இந்த பட்டையை கொதி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றுப்போக்கு, அல்சர், நாள்பட்ட இருமல் ஆகிய பிரச்சினைகளுக்கு நிவாரணம் கொடுக்கின்றது.
4. சிறுநீரகக் கற்கள், மஞ்சள் காமாலை, எலும்பு முறிவு பிரச்சினையுள்ளவர்கள் அவர்கள் பயன்படுத்தும் மருந்தில் இந்த பட்டையை முக்கிய பொருளாக இருந்து வருகின்றது.
5. அழற்சியால் உங்கள் சருமங்களில் புண்கள் வந்து விட்டால் வேம்பாளம் பட்டையுடன் பெருங்காயம், கருஞ்சீரகம் பொடித்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவினால் கூடிய விரைவில் தீர்வு தருகின்றது.
6. பொடுகு, பேன், இளநரை, அரிப்பு, வெடிப்பு பிரச்சினையுள்ளவர்கள் 2 டேபிள் ஸ்பூன் துளசி பொடி, 2 டேபிள் ஸ்பூன் தேன் இவை இரண்டையும் சிறிய கிண்ணத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
தலையில் பூசி சரியாக 15 நிமிடங்களுக்கு பின்னர் நன்றாக தலையை கழுவ வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |