இன்று வெள்ளிக்கிழமை! இப்படி பூஜை செய்தால் செல்வங்கள் வந்து சேரும்
தெய்வத்திற்கு உகந்ததாக பார்க்கப்படும் வெள்ளிக்கிழமையன்று பெரும்பாலானவர்கள் பூஜை செய்து வழிபடுவார்கள்.
வீட்டை சுத்தம் செய்து, நீராடிவிட்டு வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீகம் கமழ பயபக்தியுடன் பூஜை செய்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பலரது நம்பிக்கை.
வெள்ளிக்கிழமை ஆன்மீக முறைப்படி விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.
வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொள்வது எப்படி?
வெள்ளியன்று விடியற்காலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்துவிட்டு நெற்றியிலே குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
வாசல் தெளித்து அழகான கோலம் போட்டுக் கொள்ளவும், வீடு முழுவதையும் சுத்தப்படுத்தி குறிப்பாக பூஜையறையை சுத்தப்படுத்தி தீபம் ஏற்றி வைக்கவும்.

சாம்பிராணிப் புகை போடுவது நல்லது, அன்றைய தினம் வீடு முழுவதும் பிரகாசமாக பளிச்சென்று இருத்தல் அவசியம்.
உங்களால் முடிந்தளவு அன்றைய தினம் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம், மிக எளிமையான விரத முறையை கடைபிடிக்கவும், மாலையில் பெருமாள் கோயிலில் தாயாரை தரிசிப்பது முக்கியம்.
கோவில் சென்று வந்தவுடன் பிரசாதங்களை வைத்து பூஜையறையில் மஹாலக்ஷிமிக்கு நிவேதனம் செய்யலாம், இப்படி தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு.