அப்பப்பா... பிரண்டையில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? இது தெரியாம போச்சே
விலை மலிவாக கிடைக்கும் பிரண்டையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.
அடிக்கடி பிரண்டைய உணவில் சேர்த்துக் கொண்டு வந்தீர்கள் என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும், பசியின்மை போக்கும்.
மூல நோய், இரத்த மூல நோய் உள்ளவர்கள் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, ஞாபக சக்தியை பெருக்க, உடைந்த எலும்புகள் விரைவாகக் கூட பிரண்டை உதவி செய்கிறது.
சரி... பிரண்டையை கொண்டு என்னென்னலாம் செய்யலாம் என்று பார்ப்போம் -
நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்றால், பிரண்டை துவையல் சாப்பிட்டு வரலாம்.
பெருங்குடல் புண் சரியாக, பிரண்டையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வரலாம்.
நல்ல பலன் கிடைக்கும். நரம்பு தளர்ச்சி இருப்பவர்கள் பிரண்டையை சாப்பிட்டு வரலாம். அதேபோல், ஆண்மை சக்தியை பெற பிரண்டையை சாப்பிடலாம்.
இளம் பிரண்டை நன்றாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் சரியாகும்.
உடலில் ஏதாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து கட்டி வந்த இடத்தில் வைத்து கட்டி வர வீக்கம் குறைந்து போகும்.
பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினை நீங்கும்.
மாதவிடாய் பிரச்சினை இருக்கும் பெண்கள் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |