ஆதி குணசேகரனாக நடிக்க கேட்டது உண்மையே... பிரபல நடிகர் உடைத்த உண்மை
எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த மாரிமுத்து நடித்த குணசேகரன் கதபாத்திரத்திற்கு தன்னை நடிக்க கேட்டது உண்மையே என்று பிரபல நடிகர் கூறியுள்ளார்.
நடிகர் மாரிமுத்து
பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பினால் நேற்று காலை உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரான தேனியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தது தான் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுத் தந்தது.
தற்போது குறித்த கதாபாத்திரம் இனி என்னவாகும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. மாரிமுத்துவைப் போன்று மிரட்டலாக தோரணையில் வலரும் நடிகருடன், பிரபல எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தியை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேல ராமமூர்த்தியின் பதில் என்ன?
வேல ராமமூர்த்தி கூறுகையில், மாரிமுத்து மறைவிற்கு பின்பு தன்னிடம் சேனல் தரப்பு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கேட்டார்கள்.
ஆனால் தற்போது நான் சினிமாவில் பிஸியாக இருப்பதால், சீரியலுக்கு நேரம் ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லை.
இந்த மாதம் 20ம் தேதிக்கு மேல் தான் தனது சினிமா படப்பிடிப்பு முடீகின்றது. அந்தத் தொடரில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தியது உண்மைதான்... ஆனால் அதுகுறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.