சிவப்பு, வெள்ளை, நீலம் இந்த நிறத்திலான நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
சாலையில் எத்தைனையோ வாகனங்கள் செல்கின்றன. அப்படியான வாகனங்களில் கட்டாயம் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த நம்பர் பிளேட்டுக்கள் மஞ்சள், வெள்ளை, சிவப்பு, பச்சை என பல வண்ணங்களில் போடப்பட்டிருக்கும். இந்த நம்பர் பிளேட்டுகளுக்கென சில அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த கட்டுப்பாடுகளுக்காக தான் இந்த வண்ண நம்பர் பிளேட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு வண்ண நம்பர் பிளேட்டிற்கும் என்ன அர்த்தம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நம்பர் பிளேட்டுக்கள்
வெள்ளை நிறத்தில் இருக்கும் நம்பர் பிளேட்டகளுக்கு அர்த்தம் இவை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய வாகனம். இந்த வாகனங்களை வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாது.
மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகள் வாடகை மற்றும் வியாபார ரீதியிலான வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடியதாகும். இது பொதுவாக டாக்ஸி ட்ரக்டர் போன்ற வாகனங்கள் இருக்கும்.
கருப்பு நிற எண்பலகைகள் வணிக ரீதியிலான பயன்பாட்டு வாகனங்களாகும். தற்காலிக பதிவு எண் கொண்ட வாகனமும் சிவப்பு நிற எண் பலகையுடன் இருக்கும்.
இந்த பலகை ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். சிவப்பு நிற பலகைகள் பொதுவாக குடியரசு தலைவர், ஆளுநர் மற்றும் உயர் அரசு போன்ற அதிகாரிகளின் வாகனம் என அர்த்தம்.
பச்சை நிற எண் பலகை மின்சார வாகனம். வெள்ளை எழுத்துக்கள் இருந்தால் தனியார் வாகனம், மஞ்சள் எழுத்துக்கள் இருந்தால் அது வணிக ரீதியிலான பயன்பாட்டு வாகனம்.
நீல நிறம் உங்களுக்கு தெரிந்த ஒன்று இந்த நிறத்திலான எண் பலகைகள் வெளிநாட்டு தூதரக வாகனம் என அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |