தவறுதலாக அசைவ பீட்சாவை அனுப்பிய நிறுவனம்.. 1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நீதிமன்றத்தை அலறவிட்ட பெண்!
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் தீபாலி தியாகி. இவர் கடந்த 2019-ம் ஆண்டில் மார்ச் 21 திகதியில், ஹோலி பண்டிகைக்காக வீட்டிற்கு அமெரிக்கன் ரெஸ்டாரண்டில் சைவ பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, அப்போது அந்த பீட்சா அரை மணிநேரம் தாமதமாக வந்ததும், அவர்கள் சாப்பிட்ட போது அது அசைவ பீட்சா எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த சைவ பிரியரான அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு பின்னர் பீட்சா உரிமையாளர் தொடர்பு கொண்டு குடும்பத்திற்கே இலவச பீட்சா தருவதாக கூறியுள்ளார். ஆனால், அந்த குடும்பமோ இது சாதாரண விஷயமல்ல என்றும், பிறந்ததிலிருந்து காப்பாற்றி வந்த தனது வழக்கம் மற்றும் பாரம்பரியத்தை தன்னால் காப்பாற்ற முடியாது எனவும், தங்கள் குடும்பத்தை சுத்திகரிக்க மதிப்புமிக்க யாகங்களை செய்ததால் பல லட்சம் செலவாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், தங்கள் தவறை மறைக்க இலவச பீட்சா தருவதாகக் கூறுவது மிகப்பெரிய அவமானம் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதன்பின்னர், நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்த தீபாலி, தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி, மனதளவில் துன்புறுத்தியதற்காக நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
வழக்கை விசாரித்த, டெல்லி மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் இதுகுறித்து மார்ச் 17ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.