சர்க்கரை நோய் இருக்கா? இதை அடிக்கடி சாப்பிடுங்க...நீங்க இருக்க திசை பக்கம் கூட நீரிழிவு திரும்பி பார்க்காது!
சர்க்கரை நோய் உள்ள பலருக்கும் எந்த மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்பது தெரிவதில்லை.
சர்க்கரை நோயாளிகள் அதிக கார்போஹைட்ரேட், உயர் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் அதிகம் உள்ள காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.
இப்போது சர்க்கரை நோயாளிகள் எந்த காய்கறிகளை சாப்பிடுவது நல்லது என்பதைக் காண்போம்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளியாக இருந்தால் துளியும் அச்சம் இன்றி இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வெண்டைக்காய்
வெண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். வெண்டைக்காயை வெட்டும் போது அதிலிருந்து வெளிவரும் கூழ் திரவம் இரத்த குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது. அதுவும் வெண்டைக்காயை இரண்டாக வெட்டி ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து குடித்து வர சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.
கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதோடு, இதில் உள்ள வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
பீன்ஸ்
பீன்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மற்றொரு ஆரோக்கியமான காய்கறி. இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீனைத் தவிர, கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவு.
முட்டைக்கோஸ்
சர்க்கரை நோயாளிகளின் உணவில் சேர்க்க வேண்டிய மற்றொரு காய்கறி முட்டைக்கோஸ். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிகம் உள்ளது. மேலும் முட்டைக்கோஸ் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் கணையம் சரியாக செயல்படுவதை உறுதி செய்கிறது.
பீட்ரூட்
பீட்ரூட் இனிப்பாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த காய்கறியை சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி இருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
பீட்ரூட் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறியாகும். அதோடு பீட்ரூட் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த அளவை சீராக்கும் திறன் கொண்டது.
கத்திரிக்காய்
கத்திரிக்காய் ஒரு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி குறைவான சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி.
இந்த காயை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், இன்சுலின் உற்பத்தியை சீராக்கி இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.
சுரைக்காய்
சுரைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி. அதுவும் சுரைக்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்தால் சர்க்கரை நோயை சரியாக நிர்வகிக்கலாம்.
சுரைக்காயில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகை செய்கிறது.