டாப் நடிகர்கள் ஏன் காய்கறிகளை விரும்புகிறார்கள் தெரியுமா? இது தான் அந்தவொரு சீக்ரெட்!
பொதுவாக நாம் காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என புத்தகங்களில் படித்திருப்போம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் யாரும் பெரிதாக காய்கறிகளை விரும்புவதில்லை.
ஏனெனின் அசைவ உணவுகளை விட காய்கறிகளில் தான் நம் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றன.
அத்துடன் நாம் இன்று சினிமாவில் பார்த்து வியக்கும் பெரும்பான்மையான பிரபலங்கள் அதிகமான காய்கறிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
அப்படி என்ன தான் காய்கறிகளில் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
காய்கறிகளும் அதன் சத்துக்களும்
1. கத்தரிக்காய்
பொதுவாக தமிழர்கள் சமைக்கும் சைவ உணவுகளில் கண்டிப்பாக இந்த காய் இருக்கும். கத்தரிக்காய் அதன் வண்ணங்களுகேற்ப சத்துக்களை வேறுப்படுத்தி வைத்திருக்கின்றது.
பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. வாய்வு, பித்தம், கபம் போகும். அத்துடன் அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.
2. அவரைக்காய்
அவரைக்காயிலும் பல வகைகள் உண்டு. அதிலும் வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகளுக்கு பத்திய உணவாக கொடுக்கலாம். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. மேலும் அவரை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறையும்.
3. வாழைத்தண்டு
மற்றைய காய்கறிகளை விட இதில் கால்சியம் சத்து அதிகமாகவே இருக்கின்றது. இந்த காய்கறி சாப்பிடுவதால் உடலிலுள்ள சூட்டை தணிக்கும்.
அத்துடன் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளை விரட்டியடிக்கும். வாத பித்தம் உள்ளவர்கள் வாழைத்தண்டை தாராளமாக சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |