உடல் எடை, சுகர், இரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? ஒரே ஒரு சத்தான கஞ்சி போதும்
Samba Rava Kanji: உடல் எடையை, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் இவற்றினை குறைக்கும் சத்தான கஞ்சி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக தினமும் காலையில் பெரும்பாலான மக்கள் தோசை, இட்லி, பொங்கல் இவ்வாறான டிபன் வகைகளைத் தான் சாப்பிடுகின்றனர்.
ஆனால் இவை வயிற்றினை நிரப்ப மட்டும் தான் செய்கின்றது. ஆனால் பெரியளவில் சத்துக்கள் எதுவும் கிடையாது. காலையில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் சத்தானதாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் உடல் எடையைக் குறைக்கவும், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வெஜிடபிள் சம்பா ரவா கஞ்சியை செய்து சாப்பிடலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான இந்த கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை ரவை - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/4
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - 5 கப்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
கோதுமை ரவையை தண்ணீரில் இரண்டு முஐற நன்றாக கழுவி வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை இவற்றினை சேர்த்து வதக்கவும்.

மேலும் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் இவற்றினை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். வதக்கிய பின்பு 5 கப் தண்ணீர் சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பு கலந்து கொதிக்க வைக்கவும்.
இதனுடன் கழுவி வைத்துள்ள சம்பா கோதுமை ரவை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து கிளறினால் சுவையான வெஜிடபிள் சம்பா கோதுமை ரவா கஞ்சி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |