புரதச்சத்து நிறைந்த சோயா மிளகு குருமா.... எப்படி செய்யனும் தெரியுமா?
Soya Milagu Kurma: புரதச்சத்து நிறைந்த சோயா மிளகு குருமா வெங்கடேஷ் பாட் ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இரவு உணவு என்றாலே நாம் அனைவரும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று தான் சாப்பிடுவோம். அதுவும் சப்பாத்திக்கு என்ன சைடிஷ் வைக்கலாம் என்று யோசிப்போம்.
அந்த வகையில் சப்பாத்திக்கு சைடிஷாக செய்வது தான் இந்த சோயா கீமா. இதன் சுவை மிகவும் அசத்தலாக இருக்கும். அது மட்டுமின்றி இதனை மிகவும் சுலபமாக தயாரிக்கவும் செய்யலாம்
குழந்தைகள், பெரியோர் என அனைவரும் எப்போதும் சாப்பிடுவதை விட இந்த முறை அதிகமாக விரும்பி சாப்பிடும் சோயா கீமா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2
பட்டை - 4 துண்டு
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 1/2டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
முந்திரி - 15-20 (வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்தது)
ஊற வைப்பதற்கு
சோயா/மீல் மேக்கர் - 500 கிராம்
உப்பு - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
ஏலக்காய் தூள் - சிறிது
எலுமிச்சை - 1
தயிர் - 400 மிலி
தாளிப்பதற்கு
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
அரைத்த விழுது
தண்ணீர் - தேவையான அளவு
ஊற வைத்த சோயா
சுவைக்கேற்ப உப்பு
பிரஷ் க்ரீம் - 200 கிராம்
கொத்தமல்லி - சிறிது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
சுடு தண்ணீரில் முந்திரியை ஊற வைக்க வேண்டும். சோயாவையும் சுடு தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்ததும், எண்ணெய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, மல்லி, சோம்பு, மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம், ஊற வைத்த முந்திரி இவற்றினை சேர்த்து வதக்கிய ஆற வைக்கவும்.

பாத்திரம் ஒன்றில் சோயாவை போட்டு, அதில் உப்பு மிளகு தூள், ஏலக்காய் தூள், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.
ஏற்கனவே வதக்கிய பொருட்களை மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
சிறிது நேரம் கழித்து சோயாவை சேர்த்து கிளறிவிடவும். இதனுடன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சோயா மிளகு குருமா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |