Veera(வீரா) - ராகவனை போட்டு கொடுத்த விஜி - கண்மணி எடுத்த முடிவு
வீரா சிரியலில் விஜி பாண்டியன் சாவுக்காரணம் ராகவன் என்பதை கண்மணியிடம் கூறுகிறார். இதன் பின்னர் கண்மணியின் முடிவு என்ன என்பது எபிசோட்டில் பார்க்கலாம்.
Veera(வீரா)
பிரபல டிவி நிகழ்ச்சியில் 400 எபிசோட்டுக்களை கடந்து வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வரும் சீரியல் தான் வீரா.
இதில் முக்கிய கதாபாத்திரங்களாக மாறனின் மனைவி வீராவாக வைஷ்ணவி அருள்மொழி மற்றும் அருண் க்ரைசர் வீராவின் கணவர் மாறனாக நடித்து வருகின்றனர்.
இதன் முக்கிய கதைக்கள் பாண்டியனின் மரணத்தின் ரகசியம் தான். தற்போது இந்த ரகசியத்தின் முக்கிய பகுதி நோக்கி கதைக்களம் நகர்ந்து செல்கின்றது.
சூழ்ச்சி செய்யும் விஜி
தற்பொது வெளியாகிய குறுகிய காணொளியில் விஜி கண்மணியிடம் பாண்டியனை விபத்துக்குள்ளாக்கி உயிரை பறித்தது மாறன் இல்லை ராகவன் தான் எனும் ரகசியத்தை கூறுகிறார்.
இதை கேட்ட கண்மணி செய்வதறியாது கண்கலங்கி அந்த இடத்தை விட்டு செல்கிறார்.
இதன் பின்னர் இந்த மரணத்தின் பின் இருக்கும் உண்மையான விடயம் வெளிவருமா இல்லை கண்மணி இதற்கு வேறு முடிவு எடுப்பாரா என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
