வீரா சீரியல் நடிகையின் கூந்தல் ரகசியம் என்ன தெரியுமா?
வீரா சீரியல் நடிகையான வைஷ்ணவி தனது கூந்தல் ரகசியத்தை குறித்து கூறியுள்ளார்.
முடி பிரச்சனை
இன்றைய காலத்தில் இளம் தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்கள் முடி பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றது.
இளம் வயதில் நரை ஏற்படுதல், அதிகமாக முடி உதிர்தல் பிரச்சனை என்ற அடுத்தடுத்து கூறிக் கொண்டே போகலாம்.
இந்நிலையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான நாம் இருவரம் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாக நடித்து பிரபலமான வைஷ்ணவி அருள்மொழி சில டிப்ஸினைக் கொடுத்துள்ளார்.
இவர் தற்போது வீரா என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார்.
நடிகை வைஷ்ணவி அருள்மொழி
நடிகை வைஷ்ணவி முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கான சில குறிப்புகளைக் கூறியுள்ளார்.
முடிக்கு எப்பொழுது எண்ணெய் வைத்து மசாஜ் செய்வாராம். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், செம்பருத்தி, கற்றாழை, கருவேப்பிலை, வெந்தயம், வெங்காயம், மருதாணி சேர்த்து இவரது அம்மா எண்ணெய் காய்ச்சி கொடுப்பாராம்.
இதனை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையிலிருந்து பயன்படுத்த ஆரம்பிப்பாராம்.
மேலும் வெந்தயம் ஊற வைத்து அரைத்து அந்த பேஸ்ட்டை தலையில் தடவுவது, இதனுடன் தயிர் சேர்த்து முடியின் நுனி வரை தடவுவாராம்.
முடியின் நுனி பகுதி உடைந்திருந்தால் அதனை அடிக்கடி வெட்டிவிட வேண்டுமாம். அதிகமாக ஸ்ட்ரைட்னிங் பண்ணக்கூடாதாம்.
முடிக்கு கற்றாழை ஜெல் தடவுவது, கறிவேப்பிலையை அரைத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, ஸ்பிரே பாட்டிலில் வைத்து, அதனை உச்சந்தலை மற்றும் முடியின் வேர்காலில் ஸ்பிரே செய்வாராம்.
இவை அனைத்திற்கும் மிகவும் முக்கியம் என்னவெனில் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதும், தூங்குவதும் ஆகும். தூக்கம் குறைந்தால் முடி குறைந்துவிட ஆரம்பிக்கும் என்று நடிகை கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |