சுவையான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி? இதோ சூப்பர் ஐடியா...?
வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள்.
இன்று சுவையான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைக்காய் 4
- உப்பு
- மஞ்சள் பொடி
- கருவேப்பிலை
- கடுகு
- உளுத்தம்
- பருப்பு
- தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன்

பொடி செய்ய
- மல்லி விதை 3 டீஸ்பூன்
- மிளகாய் வற்றல் 5
- கடலை பருப்பு 2
- டீஸ்பூன் தேங்காய் துருவல்
- 3 டீஸ்பூன்
- பெருங்காய கட்டி சிறு துண்டு
- எண்ணெய் 2 டீஸ்பூன்

செய்முறை
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பெருங்காயம், மல்லி விதை, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் சிவக்க வறுத்து , கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
இந்த கலவை ஆறியவுடன் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
வாழைக்காயை தோல் நீக்கி கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வாழைக்காயை போடவும்.
வெந்தவுடன் நீரை வடிகட்டி கொட்டவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
வெந்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.
சிறிதாக அடுப்பை எரிய விட்டு 10 நிமிடம் வதங்கிய பின் பொடித்து வைத்துள்ளவற்றை சேர்த்து கலக்கவும். 3 அல்லது 4 நிமிடம் வதங்கிய பின் அடுப்பை அணைக்கவும். வாழைக்காய் கறி ரெடி.