அத்தனை ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்கும் வாழைத்தண்டு சூப்!
வாழைத்தண்டானது நமது உடலுக்கு பல நன்மைகளைக் கொடுப்பது. இந்த வாழைத்தண்டு உடலுக்கு குளிச்சியைக் கொடுத்து உடல் சூட்டைத் தணிக்கும்.
மேலும், இதில் அதிக நார்ச்சத்து நிறைந்திருக்கிறது, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த வாழைத்தண்டு சூப் குடிக்கலாம்.
இந்த வாழைத்தண்டு சூப்பை எப்படி செய்வதென்று தெரியுமா? ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1 கிண்ணம்
மிளகுத்தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகப்பொடி - 1/4 கரண்டி
எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கரண்டி
கடுகு - 1/2 கரண்டி
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
வாழைத்தண்டில் இருக்கும் நாரை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பிறகு நறுக்கிய வாழைத்தண்டை மோர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து 2 கிண்ணம் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.
வாழைத்தண்டு வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும். பின்னர் வாழைத்தண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, அந்நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த கலவையை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சூப்புடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் சீரகப்பொடி, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து சூப்புடன் கொதிக்க வைக்க வேண்டும்.
சூப் கொதித்து வந்தவுடன் கொத்தமல்லி தழைகளை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமான சூப்பரான சூப் ரெடி.