சுவையும் மருத்துவமும் நிறைந்து இருக்கும் வாழைப்பூ வடை: யாருக்கு நல்லது தெரியுமா?
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிடநாக்கு கேட்டுக் கொண்டே இருக்கும்.
அவ்வாறான வேலைகளில் வடை மிகவும் சூப்பராக இருக்கும். அதிலும் அதிக சத்துக்கள் கொண்ட வடையாக இருந்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.
வாழைப்பூ வடையானது பருப்பு வடையைப் போலவே செய்வது தான். இந்த வடையை சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கும், வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்கும் வாழைப்பூ நல்லது.
இப்போது இந்த வாழைப்பூ வடையை எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலைப் பருப்பு - 250 கிராம்
- வாழைப்பூ - ஒரு கப்
- சிறிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- கொத்தமல்லி
- கறிவேப்பிலை
- சோம்பு
- பெருங்காய பவுடர் - தேவையான அளவு
செய்முறை
கடலைப்பருப்பை நன்றாக ஊற வைத்து, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
வாழைப்பூவை காம்பு மற்றும் நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, ஆகியவற்றை பொடியாக நறுக்கி அரைத்த பருப்பு மாவில் சேர்க்கவும்.
அதன்பின், கறிவேப்பிலை, சோம்பு, பெருங்காய பவுடர் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து பிசைந்து எடுத்து, உருண்டை பிடித்து கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் காய்ந்த பின், மாவு உருண்டைகளை வட்ட வடிவமாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொன் நிறத்தில் வறுத்து எடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயார்.