வீடு திரும்பிய வாவா சுரேஷ் - உயிர் பிழைத்ததை நினைத்து உருக்கம்! அறிவுரை கூறிய மருத்துவர்கள்
பாம்பு பிடி மன்னான வாவா சுரேஷ் மீண்டும் வந்த விஷயம், அவர் கூறிய பதில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார்.
சமீபத்தில், கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த ராஜ நாகத்தினை பிடிக்க சென்ற வாவா சுரேஷை பாம்பு கடித்துள்ளது. வாவா சுரேஷ் குறித்த பாம்பை பிடித்து பைக்குள் போடும் போது ஏற்பட்ட, திடீர் அசம்பாவித காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், வாவா சுரேஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின், வாவா சுரேஷ் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக தகவல் வந்ததும், அவருக்காக நிறையபேர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து வாவா சுரேஷின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டத்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர் தற்போது தீவிர தொடர் சிகிச்சைக்கு பின், வாவா சுரேஷ் உடல் சரியாகி எழுந்து நடக்க ஆரம்பித்து இருக்கிறார்.
ஒருவருக்கு பாம்பு கடித்தால் சாதரணமாக 25 விஷ முறிவு பாட்டில்கள் செலுத்தப்பட்டாலே குணமாகி விடுவார்கள். ஆனால், வாவா சுரேஷ் 25 பாட்டில்கள் செலுத்தப்பட்டும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், தொடர்ந்து விஷ முறிவு பாட்டில்கள் செலுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது.
அதன்பின், கிட்டதட்ட 65 விஷ முறிவு பாட்டில்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு விஷ முறிவு பாட்டில்கள் ஏற்றப்பட்டது இதுவே முதல் முறையாம். தற்போது அவர் உயிர் பிழைத்துள்ளார்.
மேலும், தன்னை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். வாவா சுரேஷை எச்சரித்த மருத்துவர்கள் சரியான உபரணங்களுடன் இனி பாதுகாப்பாக பாம்பை பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதை வாவா சுரேஷ் ஏற்றுக்கொண்டு தகுந்த உபகரணங்களுடன் செயல்படுவேன் எனவும் உறுதியளித்தார். பின்னர் பேசிய வாவா சுரேஷ் தன்னை பாம்பு கடித்தவுடன் நான் இறந்துவிடுவேன் என நினைத்ததாகவும், கூறினார். இதனிடையே வாவா சுரேஷ் நலமுடன் தற்போது வீடு திரும்புள்ளார்.