“நான் தான் வாவா சுரேஷ்” மருத்துவரிடம் திணறியபடி பேசிய பாம்பு பிடி மன்னன்; வீடு திரும்புவது எப்போது?
பாம்பு பிடி மன்னான வாவா சுரேஷின் உயிருக்கு போராடும் நிலையில், அவரை பற்றி தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார். சமீபத்தில், கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த ராஜ நாகத்தினை பிடிக்க சென்ற வாவா சுரேஷை பாம்பு கடித்துள்ளது.
வாவா சுரேஷ் குறித்த பாம்பை பிடித்து பைக்குள் போடும் போது ஏற்பட்ட, திடீர் அசம்பாவித காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், வாவா சுரேஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் வாவா சுரேஷ் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக தகவல் வந்ததும், அவருக்காக நிறையபேர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து வாவா சுரேஷின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டத்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெண்டிலேட்டரிலிருந்து மாற்றப்பட்ட அவர் சாதாரணமாகவே சுவாசிக்க செய்தார். இந்த நிலையில், மருத்துவர்கள் பேச்சு கொடுத்த நிலையில், அவரின் பெயர் குறித்து கேள்வி கேட்டப்போது, நான் தான் வாவா சுரேஷ் என்று பதில் கொடுத்தார்.
மேலும், பாம்பு கடித்தது பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால், மாரடைப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின் படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்து திரவ ஆகாரம் சாப்பிட்டார் என்று தலைமை மருத்துவர் ஜெயக்குமார் கேரள ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இன்று முழுவதும் ஐசியூ வார்டில் வைத்து சிகிச்சை அளித்துவிட்டு, நாளை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.