குப்பை தொட்டி வீட்டில் இந்த திசையில் இருக்கின்றதா? பணக்கஷ்டம் அடுத்தடுத்து வருமாம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி உங்களது வீட்டில் குப்பை தொட்டியை எங்கு வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான வீடுகளில் வாஸ்து சாஸ்திரம் என்பது அதிகமாக பார்க்கப்படுகின்றது. பொருட்களை வைப்பதில் கூட வாஸ்து பார்ப்பது முக்கியமாக இருக்கின்றது.
ஏனெனில் வாஸ்துபடி சரியான இடத்தில் பொருட்களை வைத்தால் வீட்டில் வறுமை இல்லாமல் செல்வம் இருப்பதுடன், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கின்றது.

அவ்வாறு வாஸ்து தோஷத்தினை ஏற்படுத்தும் பொருட்களில் முக்கியமானதாக குப்பைத் தொட்டியும் இருக்கின்றது. பொதுவாக வீடுகளில் குப்பை தொட்டியினை நினைத்த இடத்தில் வைத்துவிடுகின்றனர்.
ஆனால் குப்பைத்தொட்டியை சரியான திசையில் வைக்கவில்லை என்றால் குடும்பத்தில் வறுமை மற்றும் துன்பம் அதிகரிக்குமாம்.
வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தினை தடுப்பதற்கு வீட்டில் குப்பை தொட்டியினை சரியான இடத்தில் வைப்பது அவசியம். இதுகுறித்து விரிவாக இந்த பதவில் தெரிந்து கொள்வோம்.
குப்பை தொட்டியை எங்கு வைக்கக்கூடாது?
பெரும்பாலான வீடுகளில் நுழைவாயில் அருகில் வைப்பதை வழக்கமாக வைக்கின்றனர். ஆனால் பிரதான வாசல் வழியாக லட்சுமி தேவியும், நேர்மறை ஆற்றல் நுழைவதால் அவ்வாறு வைப்பது தவறாகும்.
தென்கிழக்கு திசையிலும் குப்பை தொட்டியை வைக்கக்கூடாது. ஏனெனில் இந்த திசையானது நெருப்பு மற்றும் செல்வத்திற்குரிய திசையாக இருப்பதால், வீட்டில் பணவரவு பாதிக்கப்படுவதுடன், தேவையற்ற செலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான சிக்கலும் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
வடகிழக்கு திசையிலும் குப்பை தொட்டியை வைக்கக்கூடாது. இவை ஈசானி மூலை என்று அழைக்கப்படுவதால், இவை தெய்வங்களின் வசிப்பிடமாகவும் இருக்கின்றது. ஆதலால் இந்த இடத்தில் பூஜையறையாகவே, கடவுளின் சிலையையோ வைப்பது சிறந்தது. குப்பை தொட்டியினை வைத்தால் வறுமையை ஏற்படுத்துமாம்.
அதே போன்று கிழக்கு திசையிலும் குப்பை தொட்டியை வைப்பது கூடாது. இவை புதிய வாய்ப்பினை தடுப்பதுடன், உங்களை தனிமையாகவும், ஒதுக்கப்பட்டவராகவும் உணர வைக்குமாம். தன்னம்பிக்கையை இழக்க வைக்குமாம்.

எந்த திசையில் வைப்பது நல்லது?
தென்மேற்கு திசையில் குப்பைத் தொட்டியை வைப்பதால் எதிர்மறை ஆற்றல் அகல்வதுடன், வீட்டில் சமநிலையான சூழலையும் பராமரிக்கின்றது.
சுத்தம் செய்யும் பொருட்களை பராமரிக்கவும், கழிவுகளை சேகரிக்கவும் தெற்கு திசை சிறந்ததாக கருதப்படுவதுடன், நடுநிலையான திசையாகவும் இருக்கின்றது.
வடமேற்கு திசையானது பஞ்சபூதங்களுடன் தொடர்புடையதாக இருப்பதுடன், எதிர்மறை ஆற்றலையும், கழிவுகளைவும் சிரமமின்றி அகற்றுவதற்கு உதவுவதுடன், ஒளிமயமான சூழலையும் பராமரிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |