Vastu Tips: வீட்டுல காசே இல்லையா? அப்போ இந்த செடிகளை தூக்கி போடுங்க
பொதுவாக சில வீடுகளில் செடிகள் வளர்ப்பதை பொழுதுபோக்காக செய்து வருவார்கள்.
அப்படி செய்து கொண்டிருக்கும் பொழுது வீடு பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஜோதிட சாஸ்த்திரங்களின்படி, அதிர்ஷ்டத்தை கொடுக்காத செடிகளை வளர்ப்பது அவசியமற்றதாகும்.
சில தாவரங்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவையாகவும், சில செடிகள் அழகை தரும் வருகையிலும் இருக்கும். ஆனால் இது போன்ற பலன்களை தரும் செடிகளில் வாஸ்து சாஸ்த்திரங்களை பார்க்க முடியாது என கூறப்படுகிறது.
அப்படியாயின், வீட்டில் அதிகமான செடிகள் உள்ளன. ஆனாலும் அதிர்ஷ்டம் இல்லை, மாறாக கஷ்டங்கள் நிறைந்துள்ளது என்றால் அப்படியான செடிகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துவது சிறந்தது. வீட்டில் எந்தச் செடிகளை வளர்க்கக்கூடாது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
வளர்க்கக் கூடாத செடிகள்
1. சாஸ்த்திரங்களின் கூறப்பட்டதை வைத்து பார்க்கும் பொழுது இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் ஆகிய இடங்களில் வளர்க்கப்படும் பூசணிக்காய் வீடுகளில் வளர்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனின் இந்த கொடியில் எதிர்மறையான ஆற்றல்கள் நிறைந்துள்ளன. வீட்டிற்கு அருகில் வளர்த்தால் கூட கெட்ட சக்தி ஆற்றல் வறுமையை உண்டு பண்ணும்.
2. எந்த சூழலிலும் வீட்டில் புளியமரம் வைத்திருக்கக் கூடாது. புளியமரம் இருப்பது வீட்டிற்கு கெட்ட சக்திகளை ஈர்க்கும். நிதி பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
3. ரோஜா செடியை தவிர முட்கள் எந்த செடியையும் வீட்டில் வளர்க்க வேண்டாம். சில செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் வீட்டிற்கு கெடு விளைவிக்கும். போகன்வில்லாவை கூட வீட்டில் வைத்திருக்க வேண்டாம் என சாஸ்த்திரங்கள் கூறுகிறது. அதே போன்று சப்பாத்திக்களி, கற்றாழை போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.
4. கருஞ்சீரக மரம் இருந்தால் அதனை முடிந்தவரை அகற்றி விட வேண்டும். ஏனெனின் வீட்டில் நடக்கும் சண்டைகளுக்கு வாஸ்துப்படி இதுவே காரணமாக இருக்கும். வாஸ்து நிபுணர்கள் இதனை எச்சரிக்கையாக கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |